இந்தியா

“பகலிலேயே இருட்டாகும் அதிசய கிராமம்” : காரணம் என்ன தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் பகலிலேயே இருள் சூழும் அதிசய கிராமம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

“பகலிலேயே இருட்டாகும் அதிசய கிராமம்” : காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கொதுருபாகா கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இந்தக் கிராமம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதில் கிழக்கில் கொல்லமலையும், மேற்குப் பகுதியில் ரங்கநாயகன் மலையும் உள்ளது. ஓங்கி உயர்ந்துள்ள இந்த மலைகளால் காலை நேரத்தில் சூரியன் தாமதமாக உதிப்பதாகவும் மாலை நேரத்தில் சூரியன் முன்கூட்டியே மறைவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாலை 4 மணிக்கே இந்தக் கிராமத்திலுள்ள மலைகளில் சூரியன் மறைந்து கிராமமே இருளில் மூழ்குகிறது. இதுபோன்ற அதிசய கிராமம் இந்தியாவில் எந்த இடத்திலும் இல்லை, பகல் நேரங்களில் குறைந்து இரவு நேரம் அதிகரித்துள்ளதால் இங்குள்ள விவசாயம் சார்ந்த மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த காலநிலை மாற்றங்கள் அதிசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories