இந்தியா

பெண் போல பேசி சிறுமிகளை ஏமாற்றி ஆபாச வீடியோ வாங்கி மிரட்டல்... யூடியூப் மூலம் ‘வித்தை’ கற்றவர் கைது!

இன்ஸ்டாகிராமில் பல சிறுமிகளிடம் பெண் போல பேசி ஆபாச வீடியோக்களை பெற்று, பின்னர் அவர்களை மிரட்டி வந்த லக்னோவை செர்ந்த ஏ.சி மெக்கானிக்கை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண் போல பேசி சிறுமிகளை ஏமாற்றி ஆபாச வீடியோ வாங்கி மிரட்டல்... யூடியூப் மூலம் ‘வித்தை’ கற்றவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் பெண் போல பேசி ஆபாச வீடியோக்களை பெற்று, பின்னர் அவர்களை மிரட்டி வந்த லக்னோவை செர்ந்த ஏ.சி மெக்கானிக்கை போலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக கனடாவில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு நட்பாகப் பழகியுள்ளார்.

பின்னர் அந்தச் சிறுமியிடம் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேசி அவரிடமிருந்து ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாங்கியிருக்கிறார்.

பின்னர் தன் பெண் வேடத்தைக் கலைத்த அந்த ஆண் நபர், சிறுமியை மிரட்டத் தொடங்கியிருக்கிறார் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 27 அன்று டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அவர் தெரிவித்த விவரங்களின் மூலம் வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி காவல்துறை அந்த நபரின் இருப்பிட விவரங்களை தெரிந்து கொண்டனர்.

சிறுமியை மிரட்டிய நபர் லக்னோவைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் அப்துல் சமது என அறிந்த காவல்துறையினர், அவரது வீட்டிற்கே சென்று கைது செய்து டெல்லி அழைத்து வந்துள்ளனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அப்துல் சமது, யூ-டியூப் மூலமாக சமூக வலைதள மோசடி வேலைகள் குறித்தும் உள்ளூரில் இருந்து கொண்டே வெளிநாட்டு எண்களைப் போல அழைக்கும் 'Text Now' போன்ற செயலிகள் குறித்தும் அறிந்துள்ளார்.

இதையடுத்து அந்த செயலிகளைப் பயன்படுத்தி கனடாவில் இருந்து பேசும் பெண்ணாக காட்டிக்கொண்டு இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் நட்பாகப் பழகி அவர்களிடம் ஆபாச வீடியோக்களை வாங்கி அதனை வைத்து அவர்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான், சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அப்துல் சமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories