இந்தியா

ரயிலில் அரைநிர்வாணமாக சுற்றித்திறந்த எம்.எல்.ஏ : பயணிகள் அதிர்ச்சி - நடந்தது என்ன?

ரயிலில் பீகார் எம்.எல்.ஏ ஒருவர் உள்ளாடையுடன் உலா வந்தது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் அரைநிர்வாணமாக சுற்றித்திறந்த எம்.எல்.ஏ : பயணிகள் அதிர்ச்சி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் கோபால்பூரைச் சேர்ந்தவர் கோபால் மண்டல். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த இவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பாட்னாவிலிருந்து டெல்லி செல்லும் தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது கோபால் மண்டல் திடீரென தனது பேண்ட், சட்டைகளைக் கழற்றிவிட்டு, பனியன் மற்றும் ஜட்டியுடன் ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் நடந்து சென்றது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இது குறித்து பயணிகள் அவரிடம் முறையிட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் சக பயணிகள் புகார் அளித்தனர். பிறகு அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் கோபால் மண்டல் அரைநிர்வாணமாக ரயிலில் நடந்து சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போபால் மண்டலின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து எம்.எல்.ஏ கோபால் மண்டல் கூறுகையில், "ரயிலில் நான் ஏறியபோதே எனக்கு வயிற்றைக் கலக்கியது. அதனால் நான் எனது ஆடைகளை அகற்றி, துண்டை இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு நேரம் இல்லாமல் கழிவறை நோக்கிச் சென்றேன். நான் பொய் சொல்லவில்லை. என்னை நம்புங்கள். நான் யாரிடமும் அநாகரீகமாக நடந்து கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories