இந்தியா

’ஒரு ப்ளேட் பானிபூரி.. ஃபேமிலி காலி’ - உயிரை விட்ட மனைவி.. கைதான கணவன் : புனேவில் பகீர் சம்பவம்!

கணவர் பானிபூரி வாங்கி வந்ததால் ஏற்பட்ட சண்டையில் புனேவைச் சேர்ந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’ஒரு ப்ளேட் பானிபூரி.. ஃபேமிலி காலி’ - உயிரை விட்ட மனைவி.. கைதான கணவன் : புனேவில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிராவின் சோலாப்பூரைச் சேர்ந்தவர் கஹினிநாத். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிரதிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.

திருமணமான முதலே இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. அண்மையில் புனேவில் உள்ள அம்பேத்கோன் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சில நாட்களுக்கு சண்டையில்லாமல் இருந்த மகிழ்ச்சியில் அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் போது மனைவிக்காக பானி பூரி வாங்கிச் சென்றிருக்கிறார் கஹினிநாத்.

ஆனால், வீட்டில் சமைத்து வைத்திருக்கும் போது தனக்கு தகவல் தெரிவிக்காமல் எதற்காக பானி பூரி வாங்கி வந்ததாக மனைவி கேள்வி எழுப்பியதால் மீண்டும் சண்டை தலை தூக்கியிருக்கிறது. இந்த சண்டை தகராறாக முற்றி வார்த்தை போராக நிறைவுற்றிருக்கிறது.

இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு தீப்போல எறிந்திருக்கிறது. மறுநாள் கணவன் அலுவலகம் சென்றது மனைவி பிரதிஷா விஷம் குடித்து தற்கொலையில் ஈடுபட்டிருக்கிறார். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது மனைவி மயக்கமுற்றிருப்பதை கண்ட கஹினிநாத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்.

அங்கு பரிசோதித்தில் பிரதிஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து கஹினிநாத் மீது உயிரிழந்த பெண்ணின் தந்தை போலிஸில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கணவன் கஹினிநாத் மீது குடும்ப வன்முறை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories