இந்தியா

நடுவழியில் நின்ற ரயில்.. கைகளால் தள்ளிச் சென்ற தொழிலாளர்கள் : ம.பி-யில் நடந்த அவலம் - வைரல் வீடியோ!

மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பழுதடைந்து நடுவழியில் நின்ற ரயிலைப் பொதுமக்கள் கைகளால் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவழியில் நின்ற ரயில்.. கைகளால் தள்ளிச் சென்ற தொழிலாளர்கள் : ம.பி-யில் நடந்த அவலம் - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், பேருந்து போன்ற வாகனங்களைச் சிலர் கைகளால் தள்ளிச் செல்லும் காட்சிகளைப் பார்த்திருப்போம். ஆனால், நடுவழியில் நின்ற ரயிலை தள்ளி பார்த்திருக்கிறோமா?. அப்படி ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள திமார்னி ரயில் நிலையம் அருகே, ஊழியர்கள் மின்சார வயர்களை பழுதுபார்க்கும் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலை ஊழியர்களால் இயக்க முடியவில்லை. மேலும் அந்த நேரத்தில் அந்த தண்டவாளம் வழியாகப் 'பவன் எக்ஸ்பிரஸ்' வருவதாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரயில் பழுதானது குறித்தும் ஊழியர்கள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்ற ரயிலை கைகளால் தள்ளிச் சென்று மாற்று பாதியில் நிறுத்தனர். பின்னர் இரண்டு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு பவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற ரயிலை தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரயில்வே அதிகாரிகளின் இந்த அலட்சிய நடவடிக்கைக்குப் பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories