இந்தியா

‘NEET, JEE தேர்வுகள்.. இது என்ன கிறுக்குத்தனம்’: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஜார்கண்ட் முதல்வர் கண்டனம்!

ஒன்றிய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேச்சுக்கு ஜார்கண்ட் முதல்வர் கண்டம் தெரிவித்துள்ளார்.

‘NEET, JEE தேர்வுகள்.. இது என்ன கிறுக்குத்தனம்’: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஜார்கண்ட் முதல்வர் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வுகளுக்காக மாணவர்கள் பதிவு செய்து இதற்கான ஹால்டிக்கெட்டுகளும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “லட்சக்கணக்கான மாணவர்கள் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே அவர்கள் இந்த தேர்வுகளை எழுத விரும்புகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

ஒன்றிய அமைச்சரின் இந்த கருத்துக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில், “நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு கூறுகிறது.

இது என்ன ஒரு கிறுக்குத்தனம். அப்படியென்றால் ஆயுள் காப்பீட்டுத் தொகை செய்துள்ளவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தம் ஆகிவிடுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories