இந்தியா

கூடுதலாக வழங்கப்பட்ட இழப்பீடு.. அரசிடம் திருப்பித்தர 5 ஆண்டுகளாக அலையும் விவசாயி : நடந்தது என்ன?

ஹரியானா தவறுதலாக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைத் திருப்பித் தர விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டுகளாக அலைந்து வருகிறார்.

கூடுதலாக வழங்கப்பட்ட இழப்பீடு.. அரசிடம் திருப்பித்தர 5 ஆண்டுகளாக அலையும் விவசாயி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுர்ஜமல். இவரும், அவரது சகோதரரும் இணைந்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் 2016ஆம் ஆண்டு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர்.

அப்போது, பூச்சிகளால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் இருவரும் தனித்தனியாக இழப்பீடு கோரி மாநில அரசுக்கு மனு அளித்திருந்தனர். அரசு விதிகளின் படி, அவர்களுக்கு ரூ.16,550 இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் மாநில வருவாய்த்துறை இவர்களின் வங்கி கணக்கிற்குத் தவறுதலாக தலா ரூ.34,735 செலுத்தியது. இதனை அறிந்த விவசாயி சுர்ஜமல் இழப்பீட்டுத் தொகை போக மீதம் உள்ள ரூ.52,920 தொகையை அரசிடம் கொடுக்க நினைத்துள்ளார்.

இதை எப்படிக் கொடுப்பது தெரியாத அந்த விவசாயி, கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முதல் முதல்வர் அலுவகலம் அவரை அனைத்து அலுவலகங்களிலும் அவர் புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் அவருக்குச் சரியான பதிலை அளிக்கவில்லை.

மேலும், இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டபோது, ​​கூடுதல் இழப்பீட்டுத் தொகை தவறுதலாக வழங்கப்பட்டதாக மட்டுமே அவருக்கு பதில் வந்துள்ளது. ஆனால் பணத்தைத் திருப்பி செலுத்துவது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது பற்றி விவசாயி சுர்ஜமல் கூறுகையில், "காணாமல் போன கைப்பையை கண்டுபிடிப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் பாராட்டு மற்றும் வெகுமதி அளிக்கிறது. அரசு தவறாக செலுத்திய பணத்தை திரும்பச் செலுத்த நான் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories