இந்தியா

“நாடு சீரழிய இவரே காரணம்”.. கடும் அதிருப்தியால் மோடி சிலையை அகற்றிய பா.ஜ.க தொண்டர்!

கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் புனே நகரில் வைக்கப்பட்ட மோடி சிலையை பா.ஜ.க தொண்டர் அகற்றினார்.

“நாடு சீரழிய இவரே காரணம்”..  கடும் அதிருப்தியால் மோடி சிலையை அகற்றிய பா.ஜ.க தொண்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் மயூர் முன்டே. பா.ஜ.க நிர்வாகியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுத் பகுதியில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்து கோயில் கட்டினார்.

மயூர் முன்டேயின் இந்த செயலுக்கு சிவசேனா, என்.சி.பி கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மேலும் நாட்டில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் வாழவே சிரமப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

பொருளாதாரம் சீரழிந்துள்ளது. கொரோனாவல் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். நாடு இப்படி சிரமங்களைச் சந்தித்து இருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்குச் சிலை வைப்பது சரிதானா என கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பிரதமர் மோடிக்குச் சிலை வைத்தால் மூத்த பா.ஜ.க தலைவர்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த விவகாரம் டெல்லி தலைமையிடம் வரை சென்றுள்ளது. இப்படி கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து வந்ததால், பிரதமர் மோடியின் சிலையை மயூர் முன்டே அகற்றியுள்ளார்.

இது குறித்து சிவசேனா கட்சியினர் கூறுகையில், “நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. ஏழைகள் வாழவே சிரமப்படுகிறார்கள். அவர்களின் குறைகளைத் தீர்த்துவைக்கக் கோரி பிரார்த்தனை செய்ய வந்தோம். ஆனால், சிலை அகற்றப்பட்டுவிட்டது” என கிண்டல் அடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories