இந்தியா

அம்மிக்கல்லை போட்டு கர்ப்பிணிப் பெண் கொலை... குற்றவாளியை காட்டிக்கொடுத்த குழந்தை : உ.பி.யில் பயங்கரம்!

உத்தர பிரதேசத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மிக்கல்லை போட்டு கர்ப்பிணிப் பெண் கொலை... குற்றவாளியை காட்டிக்கொடுத்த குழந்தை : உ.பி.யில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், பரேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினிதா. கர்ப்பிணியான இவர் தனது குழந்தை, கணவர், மாமியாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வினிதாவின் கணவர் வெளியூர் சென்றுள்ளார்.

அதேபோல், செவிலியராக வேலை பார்க்கும் மாமியாரும் அன்று பணிக்குச் சென்றுவிட்டார். இதனால் தனது ஆறு வயது குழந்தையுடன் வினிதா தனியாக இருந்துள்ளார். அடுத்த நாள் காலை பணி முடித்துவிட்டு, வினிதாவின் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ரத்த வெள்ளத்தில் மருமகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தாய் இறந்தது தெரியாமல் குழந்தை அவரது உடல் அருகே அழுதுகொண்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வினிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலிஸார், குழந்தையிடம் தாய் உயிரிழந்தது குறித்துக் கேட்டனர். குழந்தை கூறியதன் அடிப்படையில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

வினிதாவின் உறவினர் ஆகாஷ்குமார் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ்குமார், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் தப்பிச்சென்ற ஆகாஷ் குமாரைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories