இந்தியா

ஒட்டுக்கேட்பு விவகாரம் : போர்க்கொடி தூக்கும் முதல்வர் நிதிஷ்குமார் - பீகாரில் கவிழும் பா.ஜ.க கூட்டணி ?

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் நிதிஷ்குமார் பேசியிருப்பது பீகார் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுக்கேட்பு விவகாரம் : போர்க்கொடி தூக்கும் முதல்வர் நிதிஷ்குமார் - பீகாரில் கவிழும்  பா.ஜ.க கூட்டணி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் ஒன்றிய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க முன்வராமல் நாள்தோறும் கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது. அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நேரமும், மக்கள் வரிப் பணமும் வீணாகுகிறது என ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.கவின் ஆதரவோடு பீகாரில் முதல்வராக இருக்கும் நிதிஷ்மார்,”உண்மையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். நீண்ட நாட்களாக ஒட்டுகேட்பு குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம். மக்களும் இது குறித்துப் பேசி வருகிறார்கள். எனவே பெகாசஸ் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரே ஒட்டுக்கேட்டு விவகாரம் குறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக பேசியிருப்பது மோடி அரசுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் நிதிஷ்குமார் சமீபகாலமாக்கப் பா.ஜ.கவுக்கு எதிராக பேசிவருகிறார்.

அன்மையில் கூட உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டமுன்வடிவு வந்தபோது தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நிதிஷ்குமார் தொடர்ச்சியாக பேசிவருவது பா.ஜ.க கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories