இந்தியா

“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த புதுச்சேரி சபாநாயகர்!

புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சியில் திறப்பு விழா கண்ட அங்கன்வாடி மையத்திற்கு மீண்டும் சபாநாயகர் செல்வம் திறப்பு விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த
புதுச்சேரி சபாநாயகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

இதனைக் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாகப் பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையத்தைச் சுத்தம் செய்து நேற்று சபாநாயகர் செல்வம் மீண்டும் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த
புதுச்சேரி சபாநாயகர்!

மேலும், அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் காகிதகங்களை ஒட்டி மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாகக் கட்டியது போல் நாடகம் ஆடி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் சபாநாயகர் திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories