இந்தியா

“சட்டங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய நிதிஷ்குமார் !

சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

“சட்டங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய நிதிஷ்குமார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை முன்னெடுத்துள்ளதற்கு, பா.ஜ.க ஆதரவோடு ஆட்சி செய்து வரும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு 2021-2030 ஆம் ஆண்டுக்கான புதிய மக்கள் தொகை வரைவு மசோதாவை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில், 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அசாம் மாநிலத்திலும் "கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிற அரசாங்க திட்டங்களுக்கும் மக்கள் தொகை விதிமுறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

“சட்டங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது” : பா.ஜ.க அரசை வெளுத்து வாங்கிய நிதிஷ்குமார் !

இந்நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், “ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் விரும்பியதைச் செய்யச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அடைய முடியாது என்பது எனது கருத்து. நமது பெரிய பொறுப்பு என்னவென்றால், பெண்கள் கல்வி கற்கும்போது, அவர்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள், இதன் விளைவாக கருவுறுதல் விகிதம் குறைகிறது. அதனால், பீகாரில் கருவுறுதல் விகிதம் இப்போது குறைகிறது” என தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், அசாம் மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து ஜூலை 19ம் தேதி துவங்கும் மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த பிரச்சனையும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories