இந்தியா

“ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” : புதுவை முதலமைச்சர் அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

“ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” : புதுவை முதலமைச்சர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவியதை அடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும் அரசும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளது. கொரோனா குறைவதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதையடுத்து இம்மாதம் 16ம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories