இந்தியா

வேளாண் சட்டங்களை தொடர்ந்து எரிவாயு விலை உயர்வுக்கும் எதிர்ப்பு - போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்!

ஜூலை 8ம் தேதி நாடு முழுவதும் சாலை ஓரங்களில் டிராக்டர்களை நிறுத்திப் போராட்டம். நாடாளுமன்றம் கூடும் நாட்களில் நாடாளுமன்றம் அருகே தினமும் போராட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் அறிவிப்பு.

வேளாண் சட்டங்களை தொடர்ந்து எரிவாயு விலை உயர்வுக்கும் எதிர்ப்பு - போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல மாதங்களால டெல்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி ஜூலை 8ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைவரும் டிராக்டர், விவசாய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி போரட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னையை தினமும் எழுப்ப வலியுறுத்தி அனைத்து எதிர்கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளதாகவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories