இந்தியா

“11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி.. திணறும் தொழிற்துறை” : பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு!

இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி குறியீடு 48.1 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், ‘ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

“11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி.. திணறும் தொழிற்துறை” : பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி தொடர்பான பி.எம்.ஐ (PMI) குறியீடும் 11 மாதத்தில் இல்லாத அளவுக்கு 48.1 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், ‘ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா’ (IHS Markit India) தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2020க்குப் பிறகு முதல் முறையாக குறியீட்டு எண் 50.0 ஐ விடக் குறைந்திருப்பதாகவும் அது கூறியுள்ளது. மேலும் கடந்த 2021 மே மாதத்தில் கூட பிம்.ஐ குறியீடு 50.8 சதவிகிதமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது.

“ஜூன் மாதத்தில் மூலதன பொருட்களின் விலை ஏற்றத்தின் மத்தியில், உற்பத்தி ஒரு கூர்மையான சரிவினைக் கண்டது; தேவையும் ஜூன் மாதத்தில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது” என்று கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது, நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் 9.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனை முன்பு, 10.5 சதவிகிதமாக ‘ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா’ கணித்திருந்த நிலையில், தற்போது அதில் 1 சதவிகிதத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories