இந்தியா

“ஒன்றிய அரசின் பொருளாதார தொகுப்பை யாரும் பயன்படுத்த முடியாது; இது மற்றொரு ஏமாற்று” : ராகுல் காந்தி சாடல்!

ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பை புரளி என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“ஒன்றிய அரசின் பொருளாதார தொகுப்பை யாரும் பயன்படுத்த முடியாது; இது மற்றொரு ஏமாற்று” : ராகுல் காந்தி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் எனக் கூறி நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவற்றை புரளி என விமர்சித்துள்ளார் காங். எம்.பி ராகுல் காந்தி.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச்சலுகை திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்த பொருளாதாரத் தொகுப்பை எந்தவொரு குடும்பமும் தங்களது வாழ்க்கை, உணவு, மருந்து, குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களுக்காக பயன்படுத்த முடியாது. இது தொகுப்பு அல்ல, மற்றொரு ஏமாற்று” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories