இந்தியா

“தடுப்பூசி மருத்து செலுத்தாமலே வெறும் ஊசியை மட்டும் செலுத்திய செவிலியர்” : பீகாரில் நடந்த அவலம்!

பீகாரில் இளைஞர் ஒருவருக்குத் தடுப்பூசி நிரப்பாமலே ஊசிபோட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தடுப்பூசி மருத்து செலுத்தாமலே வெறும் ஊசியை மட்டும் செலுத்திய செவிலியர்” : பீகாரில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ரஷ்யாவின் ஸ்புட்சின் வி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி முதலில் பயன்பாட்டிற்கு வந்தபோது, பொதுமக்களிடம் அச்சம் இருந்தது. ஆனால், தற்போது அச்சம் விலகி பொதுமக்கள் ஆர்வத்துடன் நாடு முழுவதும் நீண்ட வரிசையில் நின்று மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்கும் முகாம்களில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், பீகாரில் இளைஞர் ஒருவருக்கு தடுப்பூசிக்கான மருத்து செலுத்தாமலே வெறும் ஊசியை மட்டும் செவிலியர் பேட்டு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் அசார் கூறுகையில், “நான் ஜூன் 21ம் தேதி தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். அப்போது என்னுடன் தடுப்பூசி முகாமிற்கு வந்திருந்த நண்பர் அமன் கான், நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை வீடியோ எடுத்தார். பிறகு வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை பார்த்த போது, செவிலியர் ஊசியை கவரில் இருந்து எடுத்து , தடுப்பூசிக்கான மருத்தை ஊசியில் நிரப்பாமல் எனக்கு ஊசி போட்டது தெரிந்தது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தவறிழைத்த செவிலியர் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் செவிலியர் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை என்றும், அந்த நபர் மீண்டும் முதல் தடுப்பூசி போட அழைக்கப்படுவார் என சுகாதாரத்துறை சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாகத் தடுப்பூசி செலுத்தும் பணி கவனக்குறைவாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு கூட ஒரு பெண்ணுக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் பா.ஜ.க கூட்டணியில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமாரின் அரசு பொதுமக்கள் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அலட்சியத்துடன் தடுப்பூசிகளைச் செலுத்தி வருவது கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories