இந்தியா

சத்தீஸ்கரில் 800 கிலோ மாட்டுச் சாணம் திருட்டு.. மர்ம நபர் மீது போலிஸ் வழக்குப் பதிவு !

சத்தீஸ்கர் மாநிலத்தில் 800 கிலோ மாட்டுச் சானத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் 800 கிலோ மாட்டுச் சாணம் திருட்டு.. மர்ம நபர் மீது போலிஸ் வழக்குப் பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலத்தில், 2020ம் ஆண்டு, இம்மாநில அரசு கிராமப்புரங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கா ஒரு கிலோ மாட்டு சாணத்திற்கு ரூபாய் 2 வீதம் கொள்முதல் செய்யும் கோதன் நியா யோஜ்னா திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதையடுத்து கிராபுற மக்களுக்கு மாட்டு சாணம் வருமான ஆதாரமாக மாறியது. வருமானத்தை ஈட்டுவதற்கான கிராம மக்கள் அனைவரும் மாட்டு சாணத்தை சேகரித்து வருமானம் ஈட்டிவருகிறார்கள்.

இந்நிலையில், கோர்பா மாவட்டம் கவுதன்சமிதி கிராமத்தைச் சேர்ந்த கம்ஹான் சிங் கன்வார் என்பவர் ஜூன் 15ம் தேதி காவல் நிலையத்தில் ரூபாய் 1,600 மதிப்புள்ள 8 கிலோ மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து மாட்டுச் சாணத்தை திருடிச் சென்றவர்களைத் தேடி வருவதாக டிப்கா காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மாட்டு சாணம் திருடப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories