இந்தியா

காதலை ஏற்காததால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை... கொலையாளியை சுற்றிவளைத்துத் தாக்கிய கிராம மக்கள்!

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்காததால் இளம்பெண் கழுத்தறுத்து கொலை... கொலையாளியை சுற்றிவளைத்துத் தாக்கிய கிராம மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா. கல்லூரி மாணவியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

பின்னர் சரண், ஸ்ரீஷாவிடம் காதலைத் தெரிவித்துள்ளார். அப்போது அவரின் காதலை ஸ்ரீஷா ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

இதைப்பார்த்த கிராம மக்கள் சரணை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரிடம் கிராம மக்கள் சரணை ஒப்படைத்தனர்.

பின்னர், ஸ்ரீஷாவின் உடலை மீட்ட போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலிஸார் சேர்த்துள்ளனர். மேலும், சரண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories