இந்தியா

காதலிக்க மறுத்ததால் 22 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை : ஆட்டோ ஓட்டுநர் மூலம் சிக்கிய கொலையாளி!

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க மறுத்ததால் 22 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை : ஆட்டோ ஓட்டுநர் மூலம் சிக்கிய கொலையாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பெரிந்தல் மண்ணா பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். அவரது மனைவி தீபா. இவர்களுக்கு திருஷ்யா, தேவஸ்ரீ என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருஷ்யா சட்டக் கல்லூரியில் படிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருஷ்யாவுடன் 12ம் வகுப்பு படித்த வினீஷ் வினோத் என்ற இளைஞர் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை திருஷ்யா ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் வினோத் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து திருஷ்யா பெற்றோரிடம் கூறியுள்ளார். பிறகு அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் வினீஷ் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வினீஷை வரவழைத்து போலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாலச்சந்திரன் கடையில் தீ பிடித்தால் அவர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் திருஷ்யா மற்றும் சகோதரி தேவஸ்ரீ ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மாடி அறைக்குள் புகுந்த வினீஷ், திருஷ்யாவின் மீது 22 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

அப்போது தடுக்க வந்த தேவஸ்ரீயை கத்தியால் குத்திவிட்டு வினீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர், சத்தம் கேட்டு திருஷ்யாவின் அம்மா மாடிக்கு வந்தபோது மகள்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே திருஷ்யா பரிதாபமாக இறந்தார். தேவஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கத்தியால் குத்திவிட்டு வினீஷ், ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநருக்கு ஒருவர் செல்போன் மூலம் நடந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார். பின்னர், ஆட்டோ ஓட்டுநர் ஜவஹர், வினீஷை போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தார்.

பிறகு போலிஸார் வினீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories