இந்தியா

“பா.ஜ.க ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் (WPI inflation) 12.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

“பா.ஜ.க ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவுக்கு கொரோனா ஊரடங்கு காரணம் என பழியை கொரோனா மீது போட்டு உண்மை நிலவரங்களை மூடி மறைத்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் 2021ம் ஆண்டு மே மாதம் மற்றும் மார்ச் மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டு எண்களை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் திங்களன்று வெளியிட்டது.

அதில் இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், “ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலைப் பணவீக்கம் 10.5 சதவிகிதமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 12.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 9.75 சதவிகிதமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 20.94 சதவிகிதமாக உயர்ந்தது.

“பா.ஜ.க ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !

இதுவே மே மாதத்தில் 37.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதேபோல உற்பத்தி சார்ந்த பணவீக்கம் 9 சதவிகிதத்தில் இருந்து 10.83 சதவிகிதமாகவும், உணவு விலைப் பணவீக்கம் 7.58 சதவிகிதத்தில் இருந்து 8.11 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்புக்கு பெட்ரோல் - டீசல் மற்றும் மின்சார விலை உயர்வே பிரதானக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , சில்லரை விலைப் பணவீக்கமும் (Retail inflation) ஏப்ரல் மாத அளவான 1.96 சதவிகிதத்திலிருந்து 2021 மேமாதத்தில், 5.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, உணவுப்பொருட்கள் மீதான சில்லரை விலைபணவீக்கம் 6.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் பிரிவுகளில், உணவுப் பொருட்கள் பணவீக்கமே முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்த வகையில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே தற்போதைய சில்லறைப் பணவீக்க உயர்வுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories