இந்தியா

“பெட்ரோல் விலை பிரச்னையாக உள்ளதை ஒப்புக்கொள்கிறோம்” : தெரிந்தே மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு !

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் கொடுத்துள்ளார்.

“பெட்ரோல் விலை பிரச்னையாக உள்ளதை ஒப்புக்கொள்கிறோம்” : தெரிந்தே மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

பா.ஜ.க அரசு பெட்ரால் - டீசல் மீதான கலால் வரியை 32 ரூபாய் என உயர்த்தியதாலேயே எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், பெட்ரால்- டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 கடந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கிவிட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருப்பது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “பெட்ரால், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிக்கலாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது ஒன்றிய, மாநில அரசாக இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ .35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது. மேலும் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிக்கிறோம்.

“பெட்ரோல் விலை பிரச்னையாக உள்ளதை ஒப்புக்கொள்கிறோம்” : தெரிந்தே மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு !

ஏழைகளுக்கு எட்டு மாத அரசி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனாவுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமரின் கிசானின் கீழ் சில ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற நெருக்கடியாக காலங்களில், நலத்திட்டங்களுக்காக செலவிட பணத்தை மிச்சப்படுத்துகிறோம். உள்ளூர் வரி மற்றும் அவை மீது விதிக்கப்படும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.

இதன் காரணமாக, தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். ஒன்றிட அமைச்சரின் இந்த பதில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories