இந்தியா

புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் பலி? : இறப்பு அதிகரிப்பு ஏன்? - ஒன்றிய அரசு விளக்கம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டது.

புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் பலி? : இறப்பு அதிகரிப்பு ஏன்? - ஒன்றிய அரசு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

மேலும், படிப்படியாகக் குறைந்து வைந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சமாக 6,148 பேர் தொற்றால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த எண்ணிகைப் பதிவாகியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை ஏன் அதிகரித்தது என்று ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழக்கவில்லை என்றும் 2,197 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மறுகணக்கீடு செய்த போது 3,951 உயிரிழப்பு எண்ணிக்கை விடுபட்டது தெரியவந்தது. பின்னர் இந்த எண்ணிக்கையை இன்றை கொரோனா பாதிப்புடன் சேர்த்ததால் 6,148 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஒரு மாநிலத்தில் மட்டும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் விடுபட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது, ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கொரோனா புள்ளி விவரங்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories