இந்தியா

"பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ஆனால் வேளாண் சட்டம் திரும்பப்பெறப்படாது" - மீண்டும் நாடகமாடும் ஒன்றிய அரசு!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என ஒன்றிய அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ஆனால் வேளாண் சட்டம் திரும்பப்பெறப்படாது" - மீண்டும் நாடகமாடும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் டெல்லி எல்லையில் ஆறு மாதங்களாக விவசாயிகள் தங்களின் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

விவசாயிகளுடன் ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களைக் கட்டாயம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் போராட்டம் ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை தங்களின் போராட்டம் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது. அதேசமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அதுதவிர வேறு பிற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கலாம். மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு போராடிவரும் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. எனவே மீண்டும் மீண்டும் விவசாயிகளை ஏமாற்றாமல் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

banner

Related Stories

Related Stories