இந்தியா

“கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்”: பா.ஜ.க ஆட்சி செய்யும் உ.பி-யில் தொடரும் அவலம்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தைப் பாலத்தின் மேல் இருந்து இருவர் ஆற்றில் வீசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்”: பா.ஜ.க ஆட்சி செய்யும் உ.பி-யில் தொடரும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்கள் வீசப்பட்டிருந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் நிர்வாகம் கொரோனா நோயாளிகளின் உடலை முறையாகக் கையாளாததே இதற்குக் காரணம் என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றின்மீது, இறந்த கொரோனா நோயாளியின் உடலை ஆற்றில் தூக்கி வீசும் வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு நபர்கள் பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட உடலை பாலத்திலிருந்து கீழே தள்ளிவிடுகிறார்கள். இதை காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், மே 28ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த உடலை அடக்கம் செய்வதற்கு முறையான ஏற்பாடுகள் செய்ய வழியில்லாத காரணத்தால், அவர்கள் மேம்பாலத்தில் இருந்து ரப்தி நதியில் உடலை எறிந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடலை முறையாக அடக்கம் செய்யவேண்டிய மாநில அரசின் நிர்வாக தோல்வியே இதுபோல தவறுகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories