இந்தியா

“மருந்துவாங்கச் சென்ற இளைஞரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர்” : சத்தீஸ்கரில் நடந்த கொடூரம் !

சத்தீஸ்கரில் மருந்து வாங்கச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் கன்னத்தில் அரைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மருந்துவாங்கச் சென்ற இளைஞரின் கன்னத்தில் அறைந்த ஆட்சியர்” : சத்தீஸ்கரில் நடந்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் மருந்து வாங்கச் சென்ற ஒரு இளைஞரை மாவட்ட ஆட்சியர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, அந்த இளைஞரின் தொலைப்பேசியை வாங்கி, அதை ஓங்கி தரையில் எறிகிறார். பிறகு அந்த இளைஞர் மருந்து சீட்டை காண்பித்து, மருந்து வாங்கத்தான் நான் வெளியே வந்தேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இதை ஏற்காத ஆட்சியர் அவரின் கன்னத்தில் ஓங்கி அரைகிறார். பிறகு போலிஸாரைப் பார்த்து இவரை கவனிங்க என சொன்னதும், போலிஸார் அவரை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் இணையங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, “அந்த வீடியோவில் உள்ள நபரை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை. நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories