இந்தியா

தள்ளுவண்டியிலிருந்த முட்டையை ஆட்டையபோட்ட போலிஸ் சஸ்பெண்ட்: சண்டிகரில் விநோத சம்பவம்!

பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த வண்டியில் முட்டைகளைத் திருடிய போலிஸார் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தள்ளுவண்டியிலிருந்த முட்டையை ஆட்டையபோட்ட போலிஸ் சஸ்பெண்ட்: சண்டிகரில் விநோத சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள பதேகார் சாஷிப் நகரில் போலிஸார் ஒருவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் ஏராளமான முட்டைகளுடன் தள்ளுவண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது.

அதனருகே சென்ற போலிஸார், அங்கு யாரும் இல்லாததை அறிந்து வண்டியிலிருந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச், சுற்றி பார்த்து விட்டு, அதை தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டார்.

போலிஸாரின் இச்செயலை அருகே இருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலிஸார் நடத்திய விசாரணையில், முட்டைகளைத் திருடியது தலைமை காவலர் ப்ரித்பால்சிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து உயரதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories