இந்தியா

“என்னையும் கைது செய்யுங்கள்” : மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது - ராகுல் காந்தி ஆவேசம்!

டெல்லியில் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பிரச்சனையில், என்னையும் கைது செய்யுங்கள் என ராகுல் காந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

“என்னையும் கைது செய்யுங்கள்” : மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது - ராகுல் காந்தி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசின் கையாலாகத்தனத்தை விமர்சிக்கும் விதமாக டெல்லி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில், மோடி ஜி எங்கள் குழந்தைகளின் தடுப்பூசி ஏன் வெளிநாடு சென்றது என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. டெல்லி முழுவதுமே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாகக் கூறி டெல்லி போலிஸார் 25 பேரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போஸ்டர் ஒட்டியவர்களின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பதிவிட்டுள்ளார். மேலும் மோடி-ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பூசி ஏன் வெளிநாடு சென்றது? என்ற போஸ்டரை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த போஸ்டரை தனது முகப்பு படமாகவும் வைத்துள்ளார்.

கொரோனா தொற்று பிரச்சனையில் மத்திய மோடி அரசு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories