இந்தியா

கொரோனாவால் செத்து மடியும் நாட்டு மக்கள்.. பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்தி குளிர்காயும் மோடி அரசு !

கொரோனாவால் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு உயர்த்தி வருவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் செத்து மடியும் நாட்டு மக்கள்.. பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்தி குளிர்காயும் மோடி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு , 5 மாநில தேர்தல் முடிந்ததும், மத்திய அரசு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகிறது.

நேற்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.62 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.25 காசுகளுக்கும் விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.84 காசுகளுக்கும், டீசல் 24 காசுகள் உயர்ந்து ரூ.87.49 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

இதையடுத்து, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை ரூ.100.20க்கும், ராஜஸ்தானில் ரூ.102.42க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.102.12க்கும் விற்கப்படுகிறது. மோடி அரசின் இத்தகைய கொடூர நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories