இந்தியா

மக்களுக்கு மூடநம்பிக்கை கற்பிக்கும் பா.ஜ.க.. மாட்டுச் சாண சிகிச்சை ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்றுக்கு எதிராக, மாட்டுச் சாண சிகிச்சை முறை பல நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுக்கு மூடநம்பிக்கை கற்பிக்கும் பா.ஜ.க.. மாட்டுச் சாண சிகிச்சை ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,54,197 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் முடியததால், தன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது கொரோனா வைரஸ்.

மேலும் நாடு முழுவதும் மருத்துவமனைகளில், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், கொரோனா மருந்துகள் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், மாட்டு சாணங்களை உடலில் பூசுவதாலும், கோமியம் குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் பா.ஜ.கவை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீஸ்வாமிநாராயண் குருகுல் விஷ்வவித்யா பிரதிஷ்தனம் என்ற பெயரில் கோசாலை ஒன்று இயங்கி வருகின்றது. இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.

மக்களுக்கு மூடநம்பிக்கை கற்பிக்கும் பா.ஜ.க.. மாட்டுச் சாண சிகிச்சை ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கடந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் சுமார் 15 பேர் இங்கு வந்து மாட்டுச்சாண தெரபி சிகிச்சை எடுத்துள்ளனர். இதில் மாட்டு சாணம், கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, பின்னர் பால் மூலமாக அவை கழுவுகின்றனர். மேலும் சில மருத்துவர்களே இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வருவதாகவும் பொய்பிரச்சாரத்தை பா.ஜ.கவினர் பரப்பிவிடுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு தலைவர் தேசாய் கூறுகையில், “மாட்டு சாணம் என்பது கழிவு. மாட்டுசாணம், கோமியத்தை உடலில் பூசுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது மற்றும் கொரோனா வைரசில் இருந்தும் அவை பாதுகாக்காது. ஆனால் மியூகோர்மைகோசிஸ் போன்ற இதர பாதிப்புக்களை அவை ஏற்படுத்தலாம்” என எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories