இந்தியா

“முன்னாள் முதல்வர் மீது பா.ஜ.க-வினர் தாக்குதல்” : திரிபுராவில் கலவரத்தை தூண்டி விடும் மோடி அரசு!

திரிபுரா மாநில முன்னாள் முதல்வருர் மாணிக் சர்க்கார் மீது பா.ஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“முன்னாள் முதல்வர் மீது பா.ஜ.க-வினர் தாக்குதல்” : திரிபுராவில் கலவரத்தை தூண்டி விடும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாமேதை காரல் மார்க்ஸின் பிறந்த நாள் அன்று வீடுகளில் சி.பி.எம் ஊழியர்கள் கொண்டாடி கொடியேற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த சங் பரிவார் அமைப்பினர் சி.பி.எம் ஊழியர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, ஊழியர்களின் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சூறையாடியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம், திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாதல் சவுத்ரி ஆகியோர் திங்களன்று சாந்தி பஜார் சென்றனர்.

அப்போது அங்கு வந்த சங் பரிவார் அமைப்பினர் கம்புகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மாணிக் சர்க்கரை நோக்கி பா.ஜ.க சங் பரிவார் குண்டர்கள் பாய்ந்து செல்வதையும் தாக்குதல் நடத்துவதையும் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள காணொலியில் காண முடிகிறது.

காவல்துறையினர் மாணிக்சர்க்காரையும் சிபிஎம் ஊழியர்களையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories