இந்தியா

முன்கள பணியாளர் என ஏமாற்றி 25 வயது மகனுக்கு தடுப்பூசி போட வைத்த பா.ஜ.க MLAவின் பித்தலாட்டம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில், தனது மகன் முன்கள பணியாளர் என பொய் சொல்லி தடுப்பூசி போட வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏவின் செயல் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்கள பணியாளர் என ஏமாற்றி 25 வயது மகனுக்கு தடுப்பூசி போட வைத்த பா.ஜ.க MLAவின் பித்தலாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. இந்நிலையில் வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்த போது உத்தரகண்ட் அரசு கும்பமேளா விழாவில் பக்தர்கள் கூட அனுமதி அளித்தது.

இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் குறைந்த எண்ணிக்கையில் இருந்து தொற்று ஒரே மாதத்தில் 1.3லட்சம் பேருக்குத் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்தே வருவதால், தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மக்கள் தேவைக்கு எற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்காததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முதலில் வயதானவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்ட வந்தது. தற்போது 18 வயது மேல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இன்னும் பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கவில்லை. இதற்குக் காரணம் தடுப்பூசி பற்றாக்குறை என கூறப்படுகிறது.

முன்கள பணியாளர் என ஏமாற்றி 25 வயது மகனுக்கு தடுப்பூசி போட வைத்த பா.ஜ.க MLAவின் பித்தலாட்டம்!

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், கான்பூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ குன்வார் பிரணப் சிங்க சாம்பியன் 25 வயதாகும் தனது மகனுக்கு முன்களப் பணியாளர் என பொய் சொல்லி தடுப்பூசி போட வைத்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று தான் தொடங்குகிறது.ஆனால் பா.ஜ.க எம்.எல்.ஏ சாம்பியன் தனது மகனுக்கு வெள்ளியன்று மருத்துவமனை ஊழியர்களை மிரட்டியும், தனது மகன் முன்களபணியாளர் என பொய் சொல்லி தடுப்பூசி போட வைத்துள்ளார்.

"ஒருபுறம், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது, பா.ஜ.க எம்.எல்.ஏ சாம்பியன் தனது 25 வயது மகனுக்கு தடுப்பூசி போடுகிறார். இது பா.ஜ.க அரசு கோவிட் தொற்றை எப்படி கையாள்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது "என்று காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தாஸ்மனா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories