இந்தியா

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மனைவியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சிய கணவர்!

சிகிச்சை அளிக்கவிட்டால் என் மனைவி இறந்துவிடுவார் என டெல்லி அரசு மருத்துவமனையில் கணவர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மனைவியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சிய கணவர்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, தலைநகர் டெல்லி மருத்துவமனைகளில் நிகழும் ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் படுக்கை வசதிகள் தட்டுப்பாட்டால், கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியின் லோக் நாயக் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் நெரிசல்களினால் பல நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருந்த அவல நிலை உருவானது. இந்த சூழலில் அஸ்லம் கான் என்ற நபர், தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அங்கு படுக்கை வசதிகள் இல்லாதக் காரணத்தினால் இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள அடுத்த மருத்துவமனை என மூன்று மருத்துவமனைகளுக்கு சென்றும் அவரது மனைவிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் அஸ்லம் கான் கெஞ்சிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில் பேசிய அஸ்லம் காண், “எனது மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் என் மனைவி இறந்துவிடுவார். எனவே அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவும். தயவுசெய்து உங்களின் கால்களைத் விழக்கூடத் தயாராக இருக்கிறேன்.

'படுக்கை இல்லை' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். நான் அவளை எப்படி இறக்க விட முடியும்?” என்று கூறி அழுகையை நிறுத்தமுடியாமல் பேசினார். இந்த சம்பவம் அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories