இந்தியா

இந்தியாவில் பரவிவரும் ‘மும்முறை உருமாறிய கொரோனா’... தடுப்பூசி பலனளிக்குமா? - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவது மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவிவரும் ‘மும்முறை உருமாறிய கொரோனா’... தடுப்பூசி பலனளிக்குமா? - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ், இதுவரை 15 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், இது கொரோனாவுக்கு எதிரான போருக்கு பெருந்தடங்கலாக மாறக் கூடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோன தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தடுப்பு மருந்துகளுக்கும், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவது மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் உயிரியல் ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆய்வு மையமே இந்தியாவில் இருமுறை உருமாற்றமடைந்த வகை கொரோனா வைரஸை சமீபத்தில் கண்டுபிடித்தது.

இந்நிலையில், மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உட்பட வைரசின் மூன்று பாகங்கள் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும், இதனால் தொற்று பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரஸின் தாக்கம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் குறுகிய காலத்தில் வேகமாகப் பரவி அதிகமானோரை பாதிக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மும்முறை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் தடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories