இந்தியா

“எங்களால் முடியாது.. முடிந்தால் இனி நீங்களே தடுப்பூசி வாங்கிக் கொள்ளுங்கள்” : கைவிரித்த மோடி அரசு !

கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கும் மத்திய மோடி அரசின் முடிவால், தடுப்பூசியின் விலை பல மடங்கும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“எங்களால் முடியாது.. முடிந்தால் இனி நீங்களே தடுப்பூசி வாங்கிக் கொள்ளுங்கள்” : கைவிரித்த மோடி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வரும் சூழலில் நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக அதிரித்து வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்து 18வயதிற்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்தியில் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் நாடுமுழுவதுமே தடுப்பூசி தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை தரவேண்டிய மத்திய அரசு, மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக 3 வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் படி, முதல் 30 கோடி பேருக்கு மட்டுமே மத்திய அரசு இலவசமாக வழங்கும். அதன்பின்னர் மத்திய அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பெறும் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

“எங்களால் முடியாது.. முடிந்தால் இனி நீங்களே தடுப்பூசி வாங்கிக் கொள்ளுங்கள்” : கைவிரித்த மோடி அரசு !

இப்படி, தடுப்பூசிக்கு மாநில அரசுகள் மானியம் அளிக்க முன்வராவிட்டால், அந்த சுமையை மக்கள் தலையில் வைக்கவே இந்த ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள். தற்போது, வரிகளை தவிர்த்து கோவிஷீல்டு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு டோஸ் 206 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கி வந்தது.

இதில் ஒரளவே லாபம் கிடைத்ததாக மத்திய அரசிடம், தடுப்பூசி நிறுவனங்கள் புலம்பியதையடுத்து, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தடுப்பூசி விற்பனை தாராளமயமாக்கப்பட்டுள்ளது மத்திய மோடி அரசு. இதன் விளைவாக, ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் என்றால், ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எட்டா கனியாகும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து தங்களுடைய மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசோ, கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கி தடுப்பூசி விலை எகிற வைத்துள்ளது.

மோடி அரசின் இத்தகைய முடிவுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களுக்கான தடுப்பூசி திட்டம் என்பது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்; அது இலவசமாக இருக்க வேண்டும். இதுதான் சுதந்தர இந்தியாவின் பெருமை மிகு பாரம்பர்யம்.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு இதற்கு நேர்மாறாக உள்ளது. இலவச தடுப்பூசி என்பதற்கு பதிலாக சந்தையில் வாங்கிக்கொள்ள கூறுவது என்பது சுமையை மாநில அரசுகள் மீதும் மக்கள் மீதும் சுமத்துவது ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories