இந்தியா

“எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்”:தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மோடி அரசை சாடிய பிரியங்கா காந்தி!

தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், இறக்குமதியாளராக மாறிவிட்டோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

“எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்”:தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மோடி அரசை சாடிய பிரியங்கா காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை அலைக்கழித்துவருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.

கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலைவிட மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. உலகிலேயே அதிக கொரோனா தொற்றுகளைப் பார்த்த நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இதற்கிடையே, தடுப்பூசி போடும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இந்தியாவிலேயே தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது மோடி அரசு.

நம் நாட்டிலேயே தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது, மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றில்லாமல், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசைச் சாடியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், இறக்குமதியாளராக மாறிவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

“எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்”:தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் மோடி அரசை சாடிய பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பேரழிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது, 70 ஆண்டுகால அரசின் முயற்சிகளை அழிக்கும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படுகிறது. தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், வலுக்கட்டாயமாக இறக்குமதியாளராக மாறியிருக்கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி, விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் யார் ஒருவர் விமானியின் புகைப்படத்தை போர்டிங் பாஸில் ஒட்டியிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆபத்தான நேரத்தில் விமானத்திலிருந்து தப்பிக்கும் உயிர்காக்கும் பட்டனை அழுத்த முடியும்” என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories