இந்தியா

எகிறும் கொரோனா தொற்று: மோடி அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கப் போகிறது - ப.சிதம்பரம் எச்சரிக்கை

பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும், இதனால் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாகவும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

P Chidambaram - Modi
P Chidambaram - Modi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை எப்போதும் இல்லாத உச்சத்தை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு லட்சத்தை கடந்து உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1,29,28,574 உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 780 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். மத்திய பா.ஜ.க. அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், சர்வதேச தடுப்பூசி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. பல முதல்வர்கள் உலகளாவிய தடுப்பூசி கோரியுள்ளனர். ஆயினும் உலகளாவிய தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எந்தவொரு முன் பதிவு இல்லாமல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி என்பது காலத்தின் தேவை. மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதனால் பேரழிவை நாடு சந்திக்க இருக்கிறது. மேலும், மோடி அரசை போல், ஜனநாயக விரோதஅரசு உலகில் இல்லை என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories