Corona Virus

வீரியமடையும் கொரோனா 2வது அலை: சென்னையில் மீண்டும் வீடு வீடாக காய்ச்சல் சோதனை - பீதியில் மக்கள்!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடைமுறை தொடக்கம். காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டம்.

வீரியமடையும் கொரோனா 2வது அலை: சென்னையில் மீண்டும் வீடு வீடாக காய்ச்சல் சோதனை - பீதியில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தினசரி வைரஸ் தொற்றால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சியில் நேற்றைய தினம் மட்டும் புதிதாக 1,459 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே சென்னை முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு சோதனை செய்யப்பட்டு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் சோதனை செய்யும் நடைமுறையும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரம் சித்ரா நகர் 2வது தெருவில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அடையாறு மண்டலத்திற்குட்பட்ட சுமார் 4 லட்சம் பேருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மண்டலம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தினசரி கொரோனா சோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. புதன்கிழமை அன்று மட்டும் 200 வார்டுகளில் சுமார் 230 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிளில் கூடுதல் முகாம்கள் அமைக்கவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலைக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நோய் தொற்று அதிகரிப்பது பற்றி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories