இந்தியா

வாக்குப்பதிவில் முறைகேடு: ரிமோட் வோட்டிங் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்! #Elections2021

வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாதவர்கள் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் நடைமுறை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவில் முறைகேடு: ரிமோட் வோட்டிங் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்! #Elections2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடுகள் செய்யப்படுவதாக தற்போதும் புகார்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் அடுத்தடுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த தயாராகி வருகிறது.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் வாக்காளர்கள் இந்த முறை தபால் மூலம் வாக்களிக்க உள்ளார்கள்.

இருப்பினும் தபால் வாக்குகளிலும் முறைகேடுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது, பலரிடம் வற்புறுத்தி தாபால் வாக்குகள் பெறப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டுகளை தி.மு.க உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

வாக்குப்பதிவில் முறைகேடு: ரிமோட் வோட்டிங் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்! #Elections2021

இந்த சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தொலைதூர வாக்குப்பதிவு என்கிற திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள ஐ.டி பணியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தொலைதூரத்திலிருந்து வாக்களிப்பது தொடர்பாக தொழில் நுட்பம் தயாராகி வருவதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

ரிமோட் வோட்டிங் என்று சொல்லக்கூடிய தொழில் நுட்பத்தை சென்னை ஐஐடி வேறு சில ஐஐடி-களுடன் இணைந்து மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கான முதற்கட்ட திட்டம் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தயாராகிவிடும். இந்த தொலைதூர வாக்களிப்பு முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதனை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக சுனில் அரோரா கூறினார்.

மேலும், தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஓராண்டுக்குள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தால் போலி வாக்காளர்களை நீக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories