இந்தியா

"பெட்ரோல் விலையோடு, வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்துவோம்” : மோடி அரசு அராஜகம்!

15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் பதிவுகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை மோடி அரசு பல மடங்கு உயர்த்தி இருப்பது, வாகனம் வைத்திருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பெட்ரோல் விலையோடு, வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்துவோம்” : மோடி அரசு அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழைய வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதனால், 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதோடு அல்லாமல் தரச் சான்று பெறுவதும் கட்டாயமாகிவிட்டது.

இந்த நடைமுறையை அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கான வரைவு கட்டண பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டண பட்டியலில், இருசக்கர வாகனப்பதிவுக்கு 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனங்களுக்கு 600 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி வாகனங்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக அதிரடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதேபோல வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான கட்டணத்துடன் புதுப்பித்தல் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த மோட்டார் சைக்கிளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் 500 ரூபாயுடன் பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 1000 செலுத்த வேண்டும். ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டணமாக 1000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 3,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

"பெட்ரோல் விலையோடு, வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்துவோம்” : மோடி அரசு அராஜகம்!

வாடகை கார்களுக்கு தகுதிச் சான்றிதழ் கட்டணம் 1000 ரூபாய். புதுப்பிப்புக் கட்டணம் 7,000 ரூபாயாகும். நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான தர சான்று கட்டணம் 1,300 ரூபாயுடன் பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் 1500 ரூபாயாகவும், பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 12,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள் உரிய காலத்தில் தகுதிச் சான்றிதழ் பெற தவறினால் மாதம் தோறும் 300 முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே வணிக வாகனங்கள் ஆக இருந்தால் தினமும் 50 ரூபாயாக அபராதம் வசூலிக்கவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது மேலும் சுமையை ஏற்றுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories