இந்தியா

ஆன்லைன் விசாரணையின்போது உணவு உண்ட வழக்கறிஞர் : "எனக்கும் சாப்பாடு அனுப்புங்க” என நீதிபதி கிண்டல்! #Video

பாட்னாவில் நீதிமன்ற விசாரணையின்போது மதிய உணவு சாப்பிட்ட வழக்கறிஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆன்லைன் விசாரணையின்போது உணவு உண்ட வழக்கறிஞர் : "எனக்கும் சாப்பாடு அனுப்புங்க” என நீதிபதி கிண்டல்! #Video
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், பள்ளி முதல் நீதிமன்ற வழக்குகள் வரை எல்லாமே ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இப்படி ஆன்லைன் ஆப் மூலம் நடக்கும்போது சில நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்குவது வழக்கம்.

அந்தவகையில், பாட்னாவில் நடந்த சம்பவமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாட்னாவை சேர்ந்த வழக்கறிஞர் மேத்தா ராஜ் என்பவர், தலைமை நீதிபதியிடம் வழக்கு ஒன்று குறித்து ஆன்லைன் வழியாக வாதாடிக் கொண்டிருந்தார்.

பின்னர் மேத்தா ராஜ், வழக்கு தொடர்பான அமர்வு முடிந்துவிட்டது என நினைத்து, கேமராவை அணைக்காமல், மதிய உணவை சாப்பிட துவங்கியுள்ளார். அப்போது, முதன்மை நீதிபதி துஷார் மேத்தா, வீடியோவின் மறுமுனையில் இருந்து, 'ராஜ் இன்னும் நீங்க லைவில்தான் இருக்கீங்க என பேசுகிறார். ஆனால், வழக்கறிஞர் இதையும் கவனிக்காமல் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.

பின்னர், முதன்மை நீதிபதி, மேத்தா ராஜின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, 'எனக்கும் கொஞ்சம் உணவை அனுப்புங்க' என கேட்டபோதுதான் கேமரா இணைப்பை ஆஅப் செய்யவில்லை என்பதை உணர்ந்து பதட்டமடைகிறார் வழக்கறிஞர் மேத்தா ராஜ். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories