இந்தியா

பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பா.ஜ.கவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி! #Election2021

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பா.ஜ.கவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி! #Election2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் 2011ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 2 முறை முதல்வராக இருந்து வருகிறார் மம்தா பானர்ஜி. தற்போது இம்முறையும் முதல்வராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பரப்புரையில் அதிரடிகளைக் காட்டி வருகிறார். இம்முறை நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் மம்தா பானர்ஜி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. மம்தா பானர்ஜி முதல்வர் ஆனார்.

இதையடுத்து, 2016 ல் நடந்த தேர்தலிலும், 293 தொகுதிகளில் போட்டியிட்டது திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி. இந்த தேர்தலில் 163க்கும் அதிகமான இடங்களைப் பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக, 211 தொகுதிகளை வென்றது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வரானார்.

பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பா.ஜ.கவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி! #Election2021

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மேற்குவங்க மாநிலத்தில் 147 தொகுதிகளைப் பிடித்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கும். மேலும் பா.ஜ.க இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறது. இதற்காக திரிணாமுல் எம்.எல்.ஏ, எம்.பி.க்களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி வருகிறது. மேலும் மதவாத கருத்துகளைப் பேசி, மத்தாவுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.

மேலும், நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தொடர்ச்சியாக மேற்குவங்க மாநிலத்தில், பிரச்சாரம் மேற்கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இப்படி, பா.ஜ.க எப்படிப்பட்ட சவால்களைக் கொடுத்தாலும், அதை ‘மேற்கு வங்கத்தின் மகள்’ என்ற ஒற்றை முழக்கத்தாலும், நலிந்தோருக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாலும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

மேற்குவங்கத்தில் நுழைந்த சி.பி.ஐ அதிகாரிகளையே கைது செய்து அதிரடி காட்டியது, பிரதமர் நரேந்திர மோடியின் நிதிஅயோக் கூட்டத்தைப் புறக்கணித்தது என மேற்குவங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories