இந்தியா

“அரசு அதிகாரிகளை தடியால் அடியுங்கள்” : மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு !

அரசு அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது பெரும் சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.

“அரசு அதிகாரிகளை  தடியால் அடியுங்கள்” : மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், பெகுசாரையில் பா.ஜ.கவினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கலந்து கொண்டு, மக்கள் குறைகளைக் கேட்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என பேசியது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என என்னிடம் நிறைய புகார் வருகின்றன. இதுபோன்ற சின்னப் பிரச்னைகள் குறித்து புகாருக்கு ஏன் என் என்னிடம் வருகீறிர்கள்.

அதற்கு தான் எம்.பி, எம்.எல்.ஏ, ஆட்சியர்கள், உதவி ஆட்சியர், பி.டி.ஓ என பல அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால், பிரச்னையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் தன் பொருப்பை உணராமல், 'தடி எடுத்து தாக்குங்கள்' என வன்முறை தூண்டும் விதமாக பொதுமக்களிடம் பேசியது கண்டனத்திற்குறியது என அரசு ஊழியர்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories