இந்தியா

"பாரத் மாதா கீ ஜே" என்று முழக்கமிட உங்களுக்கு உரிமையில்லை : பா.ஜ.கவை கடுமையாகச் சாடிய உத்தவ் தாக்ரே!

"பாரத் மாதா கீ ஜே "என முழங்குவது உங்களை ஒருபோதும் தேசபக்தராக ஆக்காது என உத்தவ் தாக்ரே, பா.ஜ.க-வை விமர்சித்துள்ளார்.

"பாரத் மாதா கீ ஜே" என்று முழக்கமிட உங்களுக்கு உரிமையில்லை : பா.ஜ.கவை கடுமையாகச் சாடிய உத்தவ் தாக்ரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்ட்ரா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்ரே, சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் பெயரை மாற்றியது குறித்தும், பா.ஜ.க சீனாவை கண்டு அஞ்சுவது குறித்தும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தில் உத்தவ் தாக்ரே பேசுகையில், மோடெரா மைதானம் நரேந்திர மோடி மைதானமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதால், நாம் இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோற்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரை நாங்கள் சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளோம். ஆனால் அவர்களோ, சர்தார் வல்லபாய் படேலின் பெயரையே மாற்றியுள்ளனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடிவரும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் விநியோகத்தை துண்டித்ததோடு மட்டும் அல்லாமல், அவர்களின் பாதையில் ஆணிகளைப் பதிக்கிறது மோடி அரசு. ஆனால் சீனாவைப் பார்க்கும்போது மத்திய அரசு பயந்து ஓடுகிறது. சீனா எல்லைகளில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஊடுருவலாவது நடக்காமல் இருந்திருக்கும்.

"பாரத் மாதா கீ ஜே" என்று முழக்கமிட உங்களுக்கு உரிமையில்லை : பா.ஜ.கவை கடுமையாகச் சாடிய உத்தவ் தாக்ரே!

மேலும், பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சுதந்திர போராட்டத்தில் அங்கம் வகிக்கவில்லை. 'பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிடுவது மட்டும் உங்களை ஒருபோதும் தேசபக்தராக ஆக்காது" என தெரிவித்துள்ளார். முன்னதாக, புதுச்சேரியை தொடர்ந்து, சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க சதி செய்வதாக சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories