இந்தியா

ஜெட் வேகத்தில் உயரும் கேஸ் விலை.. ஒரே மாதத்தில் ரூ.100 உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

பிப்ரவரியில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

ஜெட் வேகத்தில் உயரும் கேஸ் விலை.. ஒரே மாதத்தில் ரூ.100  உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சிலிண்டர் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories