இந்தியா

“தணியாத விலைவாசி உயர்வு.. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு” : வெளியான அதிர்ச்சி தகவல்!

நாடுமுழுவதும் விலைவாசி அதிகரித்துள்ள சூழலில் உணவுக்கு பயன்படுத்தபடும் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

“தணியாத விலைவாசி உயர்வு.. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு” : வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக தனது வழக்கமான பொய்வாக்குறுதிகளை இந்த முறையும் அறிவித்தது. அந்தவகையில், பா.ஜ.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்பதுதான்.

ஆனால் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றாது என்பதற்கு தற்போது அதிகரித்து வரும் விலைவாசியே மிகப்பெரிய சாட்சி. மக்களின் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்து அதற்கு நேர்மாறாக மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்த மறுவாரமே எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

“தணியாத விலைவாசி உயர்வு.. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு” : வெளியான அதிர்ச்சி தகவல்!

அவ்வாறு, விலை உயர்ந்த பொருட்கள் பட்டியலில் மிக முக்கியமானது வெங்காயம். இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களின் உணவு முறைகளில் வெங்காயம் இன்றி சமைப்பது கிடையாது. இத்தகைய சூழலில் வெங்காயத்தின் விலையுயர்வு சாமானிய மக்கள் மட்டுமின்றி, விவசாயிகளை வாட்டி வதக்கியுள்ளது.

இந்தியாவில் வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஆனால், பருவ காலம் தவறிப் பெய்த கனமழையால் மகாராஷ்டிராவில் வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசன்கான் சந்தையில் இருந்துதான் இந்தியா முழுவதும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த விலையுயர்வு அங்குள்ள வியாபாரிகளையும் கவலையடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக நாசிக் சந்தையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “வெங்காயம் இந்த மாதத்தில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படும். ஆனால், அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயம் புயல் மழையால் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் சேதமடைந்துள்ளது. மேலும் சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. இந்த நிலை இப்படியே நீடித்தால், வெங்காயத்தின் விலை அளவிட முடியாத அளவுக்கு அதிகரிக்கும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“தணியாத விலைவாசி உயர்வு.. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு” : வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தபொழுதும் கூட பெரிய வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதன் பின் விலை குறைந்த போதும் கூட தற்போது வரை 50 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. முன்னதாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. தடையை சமீபத்தில்தான் மத்திய அரசு நீக்கியது.

இது ஒருபுறமிருக்க சின்ன வெங்காயத்தின் விலை விண்ணை முட்டுகிறது. குறிப்பாக, சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு 3500 முதல் 4500 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் பெரிய வெங்காயத்தின் விலை சின்ன வெங்காயத்தை ஓவர்டேக் செய்தாலும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories