இந்தியா

“கலால் வரி வருமானத்தை வைத்து பாக்கெட்டை நிரப்பும் மோடி அரசு” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பெட்ரோல், டீசல் மூலம் வசூலிக்கப்படும் வரியால் மட்டுமே மத்திய அரசு தாக்குப்பிடித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

“கலால் வரி வருமானத்தை வைத்து பாக்கெட்டை நிரப்பும் மோடி அரசு” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 53.66 மெட்ரிக் டண்ணாகக் குறைந்துவிட்டதாகக் கூறினார்.

பெட்ரோலின் அடிப்படை விலை 32ரூ 40 காசுகள்தான். ஆனால் மத்திய அரசு அதன் மீது 32ரூ 98 காசுகள் கலால் வரியை விதிக்கிறது. இப்படி 100 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

அதன் காரணமாக விலைவாசியும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளாதாகக் கூறினார். கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் கச்சா எண்ணெய் விலை 19.90 டாலராகக் குறைந்த போதும் மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பெட்ரோல், டீசல் வரியைத் தொடர்ந்து உயர்த்தியதன் மூலம் அரசு 21.5 லட்சம் கோடி ரூ வசூலித்திருப்பதாகவும் கூறினார். இந்த பெட்ரோல், டீசல் வரி வசூலை நம்பித்தான் அரசு தாக்குப்பிடித்து வருவதாக அவர் கூறினார்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். ஆனால் விலை உயராது என்று கூறினார். இந்த மாதம் மட்டும் 13 முறை அரசு விலையை உயர்த்தி உள்ளது. இதுதான் மத்திய அரசின் வாக்குறுதி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories