இந்தியா

“மேற்கு வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய இந்துத்வா கும்பல்” : நள்ளிரவில் நீடித்த பதட்டம்! VIDEO

மேற்கு வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மேற்கு வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய இந்துத்வா கும்பல்” : நள்ளிரவில் நீடித்த பதட்டம்! VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்குவங்க மாநிலத்தில், இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் என தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க வில் சேர்ந்து வருகின்றனர். அன்மையில் கூட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் நேற்று இரவு கொல்கத்தா செல்வதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசினர். இது அமைச்சர் வந்த கும்பல் மீது விழுந்து பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதனால் அமைச்சருடன் வந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாகிர் உசேனை மீட்டு ஹொசைன் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை. நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், அமைச்சருமான மலே கடாக், “வலதுசாரி சிந்தையுடைய இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அமைச்சர் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள்” என மறைமுகமாக பா.ஜ.க மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்நிலையில் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. மேலும், அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

banner

Related Stories

Related Stories