இந்தியா

“குடியரசு தின பேரணியில் வாள் வீசி வன்முறையை ஏற்படுத்திய பா.ஜ.க ஆதரவாளர் கைது” : நெருக்கடியில் மோடி அரசு!

குடியரசு தின பேரணியில் வாள் வீசி வன்முறையை ஏற்படுத்திய மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

“குடியரசு தின பேரணியில் வாள் வீசி வன்முறையை ஏற்படுத்திய  பா.ஜ.க ஆதரவாளர் கைது” : நெருக்கடியில் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போலிஸாரின் அடக்குமுறையை மீறி அமைதியான முறையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதுபோல, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த டிராக்டர் பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட நடிகர் தீப் சித்து, பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் செல்லாமல், தடுப்புகளை மீறி சென்றதால் தான் வன்முறை வெடித்தது என விவசாயச் சங்கங்கள் குற்றம்சாட்டின.

மேலும், தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று, சீக்கிய மதக்கொடியை ஏற்றி வைக்கத் தூண்டியதாகவும், போராட்டத்தைத் திசை திருப்பி காலிஸ்தான் இயக்கத்தை ஆதரித்ததாகவும் விவசாயச் சங்கங்கள் குற்றம் சாட்டின.

“குடியரசு தின பேரணியில் வாள் வீசி வன்முறையை ஏற்படுத்திய  பா.ஜ.க ஆதரவாளர் கைது” : நெருக்கடியில் மோடி அரசு!

இதனைத் தொடர்ந்து பேரணியில் வன்முறை ஏற்படுத்தியது தொடர்பாக தீப் சித்து மற்றும் அரவது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இதனை அறிந்த தீப் சித்து உடனே தலைமறைவானர். பிறகு காவல்துறை, தீப்சித்து பற்றி தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தது. மேலும் அவரை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நடிகர் தீப் சித்து, சுப்தீர் சிங், இஃபார் சிங் உள்ளிட்டோர் கைது செய்தனர்.

இதனிடையே, செங்கோட்டையில் வாள் சுயற்றிய மணீந்தர் சிங்கை போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு படை பிரிவு மணீந்தர் சிங்-ஐ இன்று கைது செய்துள்ளது.

“குடியரசு தின பேரணியில் வாள் வீசி வன்முறையை ஏற்படுத்திய  பா.ஜ.க ஆதரவாளர் கைது” : நெருக்கடியில் மோடி அரசு!

மேலும், பிட்டம்பூராவில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் இருந்த இரண்டு வாள்களையும் போலிஸார் கைப்பற்றினர். தற்போது மணீந்தர் சிங்கிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை டெல்லி போலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தீப் சித்து பா.ஜ.க ஆதரவாளர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டிருப்பது பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பாக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories