இந்தியா

“இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே வாட்ஸ் அப்பின் விதிமுறைகள் இருக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகளை இந்தியாவில் எப்படி அமல்படுத்தப் போகிறது என்பது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு.

“இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே வாட்ஸ் அப்பின் விதிமுறைகள் இருக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுமக்களின் தனி உரிமை பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் விதிமுறைகளை இந்திய பயனாளர்களுக்காக தளர்த்த அனுமதிக் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் அதே விதிமுறைகள்தான் இந்தியாவிலும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பகிரப்படுவதாக மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்தியாவில் கொண்டுவரப்பட உள்ள தகவல் பரிமாற்ற சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்தியாவிலும் வாட்ஸ் ஆப் விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து எத்தகைய விதிமுறைகளை இந்தியாவில் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து நான்கு வாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. பின்னர், வழக்கு நான்கு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories